Published : 04 Aug 2014 08:42 AM
Last Updated : 04 Aug 2014 08:42 AM

கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன?: ரிசர்வ் வங்கி அலுவலர் தேர்வில் கேள்வி

கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன, இந்தியில் பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன போன்ற கேள்விகள் ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான (கிரேடு-2) தேர்வு நாடு முழுவதும் ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கணிதம், புத்தி கூர்மை, ஆங்கிலம், பொது அறிவு என நான்கு பிரிவுகளில் மொத் தம் 200 வினாக்கள் கேட்கப் பட்டிருந்தன.

தேர்வில் பொது அறிவு பிரிவில் மொத்தம் 80 வினாக்கள் கேட்கப்பட்டன. அதில், 42-வது வினாவாக, கோச்சடையான் படத் தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பதில்கள் பட்டியலில் தேர்வு செய்வதற்காகக் கொடுக்கப்பட் டிருந்தன.

இதேபோல், மற்றொரு கேள்வியாக இந்தியில் வெளி யான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன எனக் கேட்டு வித்யாபாலன், கரினா கபூர், பிரியங்காசோப்ரா, இவர் களில் யாரும் இல்லை எனப் பதில்கள் பட்டியலில் கொடுக்கப் பட்டிருந்தன.

நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணிக்குப் பொது அறிவு பிரிவில் இவ்வாறு சினிமாவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது குறித்து தேர்வு எழுதிய கோவை மாணவர் ஒருவர் கூறுகையில், ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் இது போன்ற கேள்விகள் மிகக் கூர்மை யாகவும், யோசிக்க வைப்பதாக வும் இருக்கும். சினிமாவில் இருந்து இதுபோன்று கேட்கப்பட மாட்டாது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது எங்களை குழப் பத்தில் ஆழ்த்தியது என்றார்.

இது குறித்து வங்கி மற்றும் அரசு பணித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் அம்பேத்கர் இலவச கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் சுப்பையன் கூறியதாவது:

நாட்டின் உயரிய வங்கியாகக் கருதப்படும் ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் டி.வி. நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளைப் போல் கேட்டுள்ளது கண்டிக்கத் தக்கது.

மாணவர்களின் புத்திகூர்மை யையும், பொது அறிவையும் சோதிக்கும் அடிப்படையில் கேள்விகள் இருக்க வேண்டும்.

இதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.ஐ.) சார்பில் நடத்தப்பட்ட அலுவலர் தேர்வில் இந்தியில் யார் உயரமான நடிகை, ஒரு இந்திப் படத்தை சொல்லி யார் இதில் நடிகராக நடித்தது போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

அப்போதே, இதற்கு கண்டனம் தெரிவித்தோம். மீண் டும் அதேபோன்று கேள்வி கேட்கப் பட்டுள்ளது. இது, கேள்விகளை தயாரிக்கும் பேராசியர்களின் தகுதிக்குறைபாட்டை வெளிப் படுத்துகிறது. இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதை வரும் காலங்களில் நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x