Last Updated : 17 May, 2017 12:39 PM

 

Published : 17 May 2017 12:39 PM
Last Updated : 17 May 2017 12:39 PM

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரம்

Search on for militants in south Kashmir

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

எனினும் தீவிரவாதிகளுக்கெதிரான இந்த தேடுதல் பணி உள்ளூர்வாசிகளின் கல் எறியும் போராட்டம் காரணமாக தடுக்கப்படுவதாக பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் ஷோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இன்று (புதன்கிழமை) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ஷோபியன் மாவட்டத்திலுள்ள சைனபோரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே தேடுதல் பணி தொடங்கியது. அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகள் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள உள்ளூர் வாசிகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கற்களை எறிந்து வருவதால் தேடுதல் பணி தடைப்படுகிறது. கல் எறியும் பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே நடக்கும் மோதலில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை" என்றார்.

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிடும் 22 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை காஷ்மீரின் தெற்கு பகுதிகளிலிருந்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினரால் நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x