திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்: அக்.3 முதல் தொடக்கம்

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்: அக்.3 முதல் தொடக்கம்
Updated on
1 min read

திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருமலையில் நேற்று தேவஸ்தான இணை செயல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3 முதல், 11-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. பக்தர்களுக்கு அடிப்படை வசதி களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ காலத்தில் சாதாரண பக்தர்களும் ஏழுமலை யானை எளிதாக தரிசிப்பதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஆகியவையும் எவ்வித குறைபாடின்றி மேற் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். கூட்ட நெரிசல், அசம்பாவித சம்பவங் களை தவிர்க்க பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in