

ராஜஸ்தான் மாநிலத்தில் குடிசை யில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவர், ஆட்டை விற்று, மனைவி யின் நகையையும் அடகுவைத்து வீட்டில் கழிவறை கட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், துங்கார் பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கான்டிலால் ரோட். கூலித் தொழி லாளியான இவர், துங்கார்பூர் ரதன்பூர் சாலையில் குடிசை வீட்டில் வசித்துவருகிறார். தாய், மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரரின் விதவை மனைவி ஆகியோர் ஒன்றாக வசிக்கும் கான்டிலாலின் வீட்டில் கழிவறை வசதியில்லை.
உள்ளூரில் உள்ள பாஜகவினர் சிலர், தூய்மை இந்தியா திட்டம் குறித்து கான்டிலாலிடம் தெரிவித் துள்ளனர். கழிவறை கட்ட அரசு தரப்பில் நிதியுதவி வழங்கப்படுவ தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல்கட்ட கட்டுமான வேலை களை அவரே தொடங்கினார். முதல் தவணைத் தொகை அரசு தரப்பில் கிடைத்ததும், பொருட் களை வாங்கி மற்ற வேலைகளை யும் செய்தார். எனினும், மேற் கொண்டு அரசு தரப்பில் தரப்பட்ட தொகை போதவில்லை.
எனவே, ஆடு ஒன்றை விற்றும், மனைவியின் வெள்ளி நகை களை அடகு வைத்தும் கழிவறைக் கட்டும் பணியை முடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துங்கார்பூர் முனிசிபல் துணைத் தலைவர் கே.கே.குப்தா, கான்டிலாலை நேற்று நேரில் சந்தித்து, அவரின் ஆர்வத்தை பாராட்டினார். அடகு வைத்த நகைகளை மீட்க கூடுதல் நிதியுதவியும் கான்டிலாலுக்கு கிடைக்க வழிசெய்தார்.