கர்நாடகாவில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு ஆதரவாக எஸ்.எம்.கிருஷ்ணா பிரச்சாரம்

கர்நாடகாவில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு ஆதரவாக எஸ்.எம்.கிருஷ்ணா பிரச்சாரம்
Updated on
1 min read

காங்கிரஸில் முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா (84). ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகியிருந்த அவர் நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணாவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்பியும், நடிகையுமான‌ ரம்யாவும் வேறு பல முக்கிய நிர்வாகிகளும் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வருவார்கள் என கர்நாடக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளுக்கான இடைத்தேர்த லில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச் சாரத்தை தொடங்க இருக்கிறார்.

அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் 4 ஆண்டு கால ஆட்சியின் குறைகளையும் சுட்டிக்காட்டிப் பேசுவார்.

இடைத்தேர்தல் நடைபெறும் மைசூரு மாகாணத்தைப் பூர்வீக மாக கொண்ட முதல்வர் சித்த ராமையாவும், எஸ்.எம்.கிருஷ்ணா வும் காங்கிரஸை ஆதரித்ததால் கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவின் பக்கம் தாவி இருப்பதால் 2 தொகுதிகளிலும் வாக்குகள் சிதற வாய்ப்பு இருக்கிறது. இரு தொகுதிகளிலும் அதிக அளவில் வசிக்கும் ஒக்கலிகா வகுப்பினரின் வாக்குகள் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சாதக மாக மாறினால் காங்கிரஸின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in