

அரசியல் ஆதாயத்திற்காக நாட்டில் நிலவம் ஏழ்மையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்யவில்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மோடி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் ஏழ்மையை ஒழிக்கவோ, ஏழை மக்களுக்காக எதாவது செய்யவோ, அவர்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்றோ காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஏனெனில், மக்கள் படிப்பறிவு பெற்றுவிட்டால், தங்களது ஆட்சி நாற்காலிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் நங்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றார்.
மேலும், நேரு காலம் தொட்டு காங்கிரஸ் அரசு, ஒவ்வொரு தேர்தலின் போது மட்டும் ஏழ்மையை ஒழிப்போம் என்று மட்டும் கூறுகிறது. ஆனால், அதற்காக இதுவரை எதுவுமே செய்யவில்லை என்றும் பேசினார்.