

உத்தரப் பிரதேசத்தின் அனைத்துக் கட்சிகளின் பிரபலங்களின் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது.
பாரதிய ஜனதா:
லக்னோ ராணுவக் குடியிருப்பு தொகுதி: ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு வெற்றி வாய்ப்பு, அபர்ணாசிங் யாதவ், முலாயம்சிங் யாதவின் மருமகள் பின்னிலை வகிக்கிறார்.
சர்தானா தொகுதி: சங்கீத் சோம் முன்னிலை. இவர் முசாபர்நகர் மதக்கலவர வழக்கில் சிக்கியவர்.
நொய்டா தொகுதி: பங்கஜ்சிங் முன்னிலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகன்.
கிழக்கு லக்னோ தொகுதி: அசுதோஷ் டண்டண் முன்னிலை. இவர், பாஜக மூத்தத் தலைவர் லால்ஜி டண்டண் மகன்.
தாத்ரி தொகுதி: பாஜகவின் தேஜ்பால் சிங் நாகர் முன்னிலை. இங்கு பகுஜன் சமாஜ் இரண்டாவது இடத்தில் பின்னிலை.
மதுரா தொகுதி: ஸ்ரீகாந்த் சர்மா முன்னிலை. பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்.
பட்ரவுனா தொகுதி: சுவாமி பிரசாத் மவுரியா, மாயாவதி கட்சியில் இருந்து விலகி முக்கிய தலைவர்.
சமாஜ்வாதி
ராம்பூர் தொகுதி: ஆசம்கான் முன்னிலை, சமாஜ்வாதியின் மூத்த தலைவர்.
ஸ்வயர் தொகுதி: முகம்மது அப்துல்லா ஆசம் முன்னிலை, ஆசம்கானின் மகன்.
ஜஸ்வந்த்நகர் தொகுதி: சிவ்பால்சிங் யாதவ் முன்னிலை, முலாயம்சிங் யாதவின் சகோதரர்.
அமேதி தொகுதி: காயத்ரி பிரஜாபதி பின்னிலை. பலாத்கார வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் மாநில அமைச்சர். இங்கு பாஜக வேட்பாளர் கரிமா சிங் முன்னிலை. அமேதி அரண்மனையின் ராணியான இவர் காங்கிரஸ் தலைவர் சஞ்சய்சிங்கின் முதல் மனைவி. காங்கிரஸில் போட்டியிட்ட சஞ்சய்சிங்கின் இரண்டாவது மனைவி பின்னிலை வகிக்கிறார்,
பகுஜன் சமாஜ்
மாவ் தொகுதி: முக்தார் அன்சாரி, கிரிமினல் சிக்கி சிறையில் இருப்பவர்.
மீரட் தென்பகுதி: ஹாஜி முகம்மது யாகூபிற்கு தோல்வி முகம். இங்கு பாஜகவின் சோமேந்திர தோமர் முன்னிலை வகிக்கிறார்.
சுயேச்சைகள்
குண்டா தொகுதி: ராஜா பைய்யா, கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றவர்.
நவ்தன்வா தொகுதி: அமன்மனி திரிபாதி முன்னிலை, கொலை வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அமன்மணி திரிபாதியின் மகன்.