

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர கெய்க்வாட் கடந்த 23-ம் தேதி புனேயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது, சொகுசு வகுப்பில் பயணிக்க முடியாமல் போனது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஏர் இந்தியா நிறுவன உதவி மேலாளரை காலணியால் அடித்தார்.
இதையடுத்து கெய்க்வாட் விமானங்களில் பயணம் செய்ய ஏர் இந்தியா நிறுவனமும் பிற விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜுக்கு ரவீந்திர கெய்க்வாட் நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில், மார்ச் 23-ம் தேதி நடந்த துரதிருஷ்டவச மான சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில் ரவீந்திர கெய்க் வாட், விமானத்தில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்தது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து வந்த உத்தரவை ஏற்று, இந்த நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா தனது ஊழியர்கள் தாக்கப்படாமல் மற்றும் அவமதிக் கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். அனைத்து ஊழியர் களின் கண்ணியத்தை காக்க கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, “கெய்க்வாட்டுக்கு எதிரான போலீஸ் விசாரணை தொடரும். எதிர்காலத்தில் கண்ணியமாக நடந்துகொள்வ தாக அவர் உறுதி அளிக்க வேண் டும் என்ற நிபந்தனைகள் ஏற்கப் பட்டுள்ளன” என்றார்.