சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாக். தொடர்ந்து அத்துமீறல்: இந்திய ராணுவ பதில் தாக்குதலில் 5 பாக். வீரர்கள் பலி

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாக். தொடர்ந்து அத்துமீறல்: இந்திய ராணுவ பதில் தாக்குதலில் 5 பாக். வீரர்கள் பலி
Updated on
1 min read

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் உள்ள நடிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் உடனடியாக ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்களும், போலீஸாரும் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3.30 மணியில் இருந்து ராணுவ வீரர்கள் தீவிர வாதிகளைத் தேடி வந்தனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி யிருந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவத்தினர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதிலுக்கு வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அய்ஜாய், பஷாரத் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக் கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சோபூரில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டுகள் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீஸார் காயம் அடைந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் தெரிய வந்தது. அதன்பிறகுதான் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் டிஜிபி எஸ்.பி.வைத் நேற்று தெரிவித்தார்.

பாக். அத்துமீறல்

ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் இந்திய நிலைகள் மீது காலை 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெனரல் இன்ஜினீயரிங் ரிசர்வ் படையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் சரியான பதிலடி கொடுத்தது. இத்தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் மனீஷ் மேத்தா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிம்பர் மற்றும் பட்டல் பகுதிகளை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.

முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி, இந்திய தூதரகத்தின் துணை தூதர் ஜே.பி.சிங்கை நேரில் அழைத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in