நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம்: பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு

நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம்: பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு
Updated on
2 min read

ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தால் பெரும்பாலான மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒருநாள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.692 ஆக உயர்த்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக அதிகரிக்க வேண்டும், தனியார்மயத்தை கைவிட வேண் டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி 15-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இதன்காரணமாக இடதுசாரிகள் ஆட்சி நடத்தும் கேரளாவில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங் கியது. ஆட்டோ, டாக்ஸி, அரசு, தனியார் பஸ்கள் எதுவும் இயக் கப்படவில்லை.

தெலங்கானாவில் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் போக்கு வரத்து, வங்கிச் சேவைகள் பாதிக் கப்பட்டன. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஆந்திராவில் பொது சேவை, வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அரசு போக்குவரத்து ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பணிக்கு வரவில்லை. சிலர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். விசாகப் பட்டினம் உருக்கு ஆலை முடங் கியது.

உத்தரப் பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்பட்டன. அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். அரசு பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

இடதுசாரிகள் ஆதிக்கம் மிகுந்த மேற்குவங்கத்தில் முழுஅடைப் பால் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

அசாம் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் முடங் கின. பெரும்பாலான மாவட்டங் களில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோடா உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், உஜ்ஜைன் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை சிறிதளவு பாதிக்கப்பட்டது. அங் குள்ள மத்திய அரசு அலுவலகங் களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

ராஜஸ்தானில் சிமென்ட், ஜவுளி ஆலைகள் செயல்படவில்லை. ஜெய்ப்பூர், உதம்பூர் உள்ளிட்ட நகரங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குஜராத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலான வங்கிகள் செயல்படாததால் வாடிக்கையாளர் கள் பாதிக்கப்பட்டனர். அந்த மாநிலத்தில் ரூ.1500 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை முடங்கியது.

பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் முழுஅடைப்பால் பெரிய பாதிப்பு இல்லை. தலைநகர் மும்பை யில் போக்குவரத்து இயல்பாக இருந்தது. அந்த மாநிலத்தின் உட் பகுதிகளில் சிறிதளது பாதிப்பு இருந்தது.

டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு பஸ்கள், ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்பட்டன. செவிலியர்களில் ஒரு தரப்பினர் ஊதிய உயர்வு கோரி போராட் டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

தொழிற்சங்க வட்டாரங்கள் கூறியபோது, நாடு முழுவதும் 18 கோடி பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். பெரும்பாலான மாநிலங்களில் போராட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது என்று தெரிவித்தன. அசோசம் வட்டாரங்கள் கூறியபோது, ரூ.18 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in