

மக்கள் மனது வைத்தால் உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் ராம ராஜ்யம் மலரும் என பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, "உத்திரப் பிரதேச மக்கள் மீது எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. உ.பி. வாசிகளின் மூதாதையர்கள் ராம ராஜ்ஜியத்தை அமைத்தனர். அதை தீர்மானிக்கும் சக்தி இருந்ததால் தான் அது சாத்தியம் ஆயிற்று. இப்போது, உ.பி.யில் மீண்டும் ராம ராஜ்யம் அமைவதை தீர்மானிக்கும் சக்தியும் மக்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே நீங்கள் மனது வைத்தால் உத்திரப் பிரதேசத்தில் மீண்டும் ராம ராஜ்யம் மலரும்" என்றார்.
அடைய முடியாத இலக்குகள் பற்றி கட்சிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்ததை சுட்டிக் காட்டிய மோடி, பாஜக மக்கள் மத்தியில் வெற்று வாக்குறுதிகளை எடுத்துச் செல்ல விரும்பவில்லை, மாறாக முன்னேற்றத்திற்கு வித்திடும் குறிக்கோள்களை எடுத்துச் செல்ல விரும்புகிறது என்றார்.
நாட்டில் நிலவும் வறுமை, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் அனைத்துக்கும் காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்றார்.