Last Updated : 02 Jan, 2016 09:31 AM

 

Published : 02 Jan 2016 09:31 AM
Last Updated : 02 Jan 2016 09:31 AM

மும்பையை ஹெலிகாப்டரில் வட்டமடித்து ரசிக்கலாம்: மகாராஷ்டிரா சுற்றுலா துறை ஏற்பாடு

மும்பை நகரின் அழகை ஹெலிகாப் டரில் வட்டமடித்தபடி சுற்றிப் பார்ப் பதற்கான ஏற்பாட்டினை சுற்றுலா பயணிகளுக்கு மகாராஷ்டிரா சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் செய்துதர உள்ளது.

இதுதொடர்பாக பவன் ஹான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 30-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட் டுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை தர்ஷன் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் வரும் 7-ம் தேதி தொடங்கிவைக்கப் பட உள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலா வுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.320 கட் டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநர். நைநுதியா கூறியபோது, பயணி களுக்காக முதலில் 2 ஹெலிகாப் டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை போகப் போக அதி கரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சுற்றுலா திட்டத்தில் அடுத்த கட்டமாக தெற்கு மும்பை, மாதரன், முருத்-ஜன்ஜிரா,அஜந்தா-எல்லோரா (அவுரங்காபாத்), நாசிக், ஷிர்டி, கொங்கண கடற்கரை, நாக் பூரை அடுத்த ததோபா வனப்பகுதி ஆகிய இடங்களும் கொண்டு வரப்படும். பயணிகளுக்கு மும்பையையும் மாநிலத்தின் இதர பகுதிகளையும் சுற்றிப்பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் பயணம் வரப்பிரசா தமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x