கடந்த ஆண்டில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் 9.8 லட்சம் விண்ணப்பங்கள்: 40 சதவீத கோரிக்கைகள் நிராகரிப்பு

கடந்த ஆண்டில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் 9.8 லட்சம் விண்ணப்பங்கள்: 40 சதவீத கோரிக்கைகள் நிராகரிப்பு
Updated on
1 min read

கடந்த ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்ததாகவும் இதில் சுமார் 40 சதவீதம் நிராகரிக்கப்பட்டதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.

மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

கடந்த 2015-16-ல் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மொத்தம் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது 2014-15-ல் தாக்கலான விண்ணப் பங்களைவிட 22.67 சதவீதம் அதிகம் ஆகும். எனினும், பல்வேறு காரணங்களால் சுமார் 40 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன.

அதாவது, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட சில விவரங்களுக்கு ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரிவு 9-ன் கீழ் (தனியார் காப்புரிமை) 1 சதவீத மனுக்களும் 26-ன் கீழ் (பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்) 7 சதவீத மனுக் களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆர்டிஐ சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் (நாட்டு நலனுக்கு எதிரான செயல்) வரும் பல்வேறு உட்பிரிவுகளின் கீழ் 47 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இவ்வாறு விலக்கு அளிக்காத போதிலும், வேறு சில காரணங்களுக்காக (மர்ம மான விண்ணப்பங்கள் என்ற அடிப் படையில்) 43 சதவீத விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டன.

2014-15-ல் 75 சதவீத தகவல் அதிகாரிகள் மட்டுமே தாங்கள் பெற்ற விண்ணப்பங்கள் பற்றிய தகவலை தாக்கல் செய்தனர். ஆனால், 2015-16-ல் 94 சதவீதம் பேர் தாக்கல் செய்தனர்.

மத்திய தகவல் ஆணையம் மட்டும் கடந்த ஆண்டில் 28,188 புகார்கள், மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு வழங்கியது. இது முந்தைய ஆண்டில் 25,960 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in