வைப்பாறுடன் பம்பா, அச்சன்கோவில் நதிகளை இணைக்க கேரள அரசு எதிர்ப்பு

வைப்பாறுடன் பம்பா, அச்சன்கோவில் நதிகளை இணைக்க கேரள அரசு எதிர்ப்பு
Updated on
1 min read

நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள வைப்பாறுடன், பம்பா, அச்சன்கோவில் நதிகளை இணைப்பதற்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கேரள சட்டப்பேரவையில் நேற்று இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

தேசிய நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக அமைப்பான தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை மாநில பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவின் சம்மதம் இல்லாமல் நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தேசிய நதிநீர் மேலாண்மை ஆணையம் உறுதியளித்துள்ளது.

இது தவிர நதிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவிடமும் கேரள அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தவிர இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் குறித்த விவ

காரமும் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிந்துரைத்த மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீடு சட்டம் 1956-ல் திருத்தம் கொண்டு வருவது குறித்தும் கேரள அரசு ஏற்கெனவே தனது பரிந்துரையை அனுப்பி வைத்துவிட்டது. இதில் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in