விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு

விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் நேற்று கூறியதாவது:

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிப் பாடத்தில் விளையாட்டு கல்வியைப் புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் அடுத்தடுத்துச் செல்ல பள்ளியில் இருந்தே குடும்பத்தின ரும், சமூகத்தினரும் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிப்பார்கள் என நம்புகிறேன்.

விளையாட்டு உடல் மற்றும் மன ரீதியாக மாற்றத்தைத் தருவதுடன், குழு மனப்பான் மையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கலாச்சார விளையாட்டான கபடி மற்றும் கோ கோ-வை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியை பிரதமர் எடுத்து வருகிறார். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in