

குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதிலும் 3,000 மக்கள் மருந்தகங்கள் (ஜன் அவ்ஷாதி) திறக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.
சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் குறைந்த விலை மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் விற்பனைக்கான 2 ‘அம்ரித்’ அங்காடிகளை ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த ஆண்டு நாடு முழு வதும் இதுபோல் 300 அம்ரித் அங்காடிகள் திறக்க திட்டமிட்டுள் ளோம். அம்ரித் அங்காடிகள் திறக்க இடம் அளிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள் ளோம். அம்ரித் அங்காடிகளில் மருந்துகளும் மருத்துவ சாதனங் களும் மிகவும் குறைந்த விலை யில் விற்கப்படும். பிராண்டட் வகை மருந்துகள் 69 தள்ளுபடியில் இங்கு விற்கப்படும். அதாவது 8 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை இங்கு தள்ளுபடி கிடைக்கும்.
இதுவரை 9 அம்ரித் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.23 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளால் ரூ.16 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் இந்த ஆண்டு 3,000 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 முதல் 7 கடைகள் அமைக்கப்படும். தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதே இதன் நோக்கம்.
நாட்டில் தலா ரூ.120 கோடி செலவில் 20 புற்றுநோய் மருத்துவ மனைகளை மத்திய அரசு அமைக்க உள்ளது. இவை தவிர தலா ரூ.50 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.
ஜே.பி.நட்டா