

உத்தராகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் திங்கள்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 65 யாத்ரீகர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். கங்கோத்ரி செல்லும் வழியில் உள்ள கங்னானி கர்மகுண்ட் கோயிலின் அர்ச்சகர் நிலச்சரிவில் சிக்கினார். பின்னர் இவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ரூர்க்கி அருகே காளியார் பகுதியில் மின்னல் பாய்ந்து 3 பேர் இறந்தனர். பவுடி என்ற இடத் தில் மின்னல் பாய்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கனமழையால் பெருமளவில் குடிசை வீடுகள் சேதம் அடைந் துள்ளன.