

மத்திய அரசு, மோடியால், மோடிக்காக மட்டுமே நடத்தப்படுவது அல்ல என்பதை நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கறாராக அறிவுறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை விடுத்தது. இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசு என்று அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. எனவே மோடியின் அரசு மோடிக்காக மோடியால் நடத்தப்படுவதல்ல என்ற நடைமுறை எதார்த்தத்தை பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
என்கிற தொனியில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.