

தெற்கு காஷ்மீரில் காசிகுந்த் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
காசிகுந்த் பகுதியில் செயிம்பூரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதனை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 9.40 மணிக்கு இந்த சண்டை தொடங்கியதாக தெற்கு காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. விஜய குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஹிஸ்புல் முஜாகதீன் அமைப்பு பயங்கரவாதி ஜாவேத் சல்பி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.