Last Updated : 03 Jun, 2016 08:30 AM

 

Published : 03 Jun 2016 08:30 AM
Last Updated : 03 Jun 2016 08:30 AM

பருவ மழை கூடுதலாக பெய்ய அதிக வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை இயல்பானது முதல் கூடுதலானது வரை பொழிவதற்கு 96 சதவீத வாய்ப்புகள் உள்ளது, மழை பற்றாக்குறையாக இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நீண்ட கால வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் லட்சுமண் சிங் ரதோர் நேற்று வெளியிட்டார். அவர் கூறும் போது, “பருவமழையின்போது வட மேற்கு இந்தியா 108 சதவீத நீண்டகால சராசரி மழைப்பொழி வைப் பெறும். மத்திய இந்தியா மற்றும் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் 113 சதவீத நீண்டகால சராசரி மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு இந்திய பகுதியில் 94 சதவீத மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்

90 சதவீதத்துக்கும் குறைவான மழைப்பொழிவு, பற்றாக்குறை என்றும், 104-110 சதவீதம் இருப்பின் சராசரியை விட அதிகம் என்றும், 110-க்கும் அதிகமாக இருப்பின் கூடுதல் மழைப்பொழிவு எனவும் குறிப்பிடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x