Last Updated : 21 Jul, 2016 09:39 AM

 

Published : 21 Jul 2016 09:39 AM
Last Updated : 21 Jul 2016 09:39 AM

அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினர் ஆவதற்கு சீனாவின் ஆதரவை பெற இந்தியா தொடர்ந்து முயற்சிக்கிறது: சுஷ்மா தகவல்

“அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு, சீனாவின் ஆதரவை பெற இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது’’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக விண்ணப் பித்தது. இக்குழுவில் உறுப்பினராக உள்ள எல்லா நாடுகளும் ஆதரவு அளித்தால்தான் உறுப்பினராக முடியும். பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தியாவுக்கு சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘‘அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) இந்தியா கையெழுத் திட்டால்தான், என்எஸ்ஜி.யில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்’’ என்று சீனா கூறியது.

இதற்கிடையில் தென்கொரிய தலைநகர் சியோலில் நடந்த என்எஸ்ஜி கூட்டத்தில் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் நேற்று பேசும்போது, ‘‘சியோல் கூட்டத்தில் இந்தியாவின் விண் ணப்பம் ஏற்கப்படாததால், மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக கூற முடியாது. என்பிடி.யில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜி.யில் உறுப்பினராக சேர்ப்பதில்லை என்று கூறுகின்ற னர். இந்த நடைமுறை விஷயத்தில் சீனா தடை ஏற்படுத்திவிட்டது. நான் மீண்டும் சொல்கிறேன். சீனாவின் ஆதரவை பெற இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேசமயத்தில் அணுஆயுத தடை பரவல் தடை ஒப்பந்தத்தில் நிச்சயம் கையெழுத்திட மாட்டோம். இந்த விஷயத்தில் முன்பு இருந்த அரசை யும் (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு) பாராட்டுகிறேன்’’ என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா போஸ் உட்பட உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய துணை கேள்விகளுக்கு சுஷ்மா பதில் அளிக்கையில், ‘‘என்எஸ்ஜி.யில் இந்தியாவை உறுப்பினராக்க முடியாது என்று சீனா சொல்லிவிட்ட பிறகு, அதை விட்டுவிட முடியாது. இங்கு கூட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவுக்கு மற்ற எல்லா கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. ஆனால் காங்கிரஸ் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸின் ஆதரவை பெற தொடர்ந்து முயற்சிக்கிறோம். அதுபோல்தான் என்எஸ்ஜி விஷயத்தில் சீனாவில் ஆதரவை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளோம்’’ என்றார்.

அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசிக் கொண்டிருக்கும்போது, காங் கிரஸ் உறுப்பினர்கள் மக்களவை யின் மைய பகுதிக்கு சென்று, குஜராத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று கோரி கூச்ச லிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2 ஆண்டு தொழிற்பயிற்சி

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:

தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு 2 ஆண்டு களுக்கு தொழிற்பயிற்சி (அப்ரென் டீஸ்) அளிக்கப்படும். இதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் தலா ரூ.18 ஆயிரம் வீதம் அந்த நிறு வனங்களுக்கு மத்திய அரசு நேரடி யாக அளிக்கும். 3 ஆண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத்திய அமைச் சகங்களும் தங்களின் கட்டுப்பாட் டில் உள்ள பொதுத்துறை நிறு வனங்களுக்கு உத்தரவிட்டு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக் கான ஏற்பாடுகளை தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x