

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். சுமார் 75 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட அரசியல் ரீதியான தீர்வை காண வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘காஷ்மீரில் நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தவர் கள் அனைவரும் இந்நாட்டை சேர்ந்தவர்களே. இளைஞர்கள், பாதுகாப்பு படையினர், போலீ ஸார் ஆகியோர் உயிரிழந் திருப்பது மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. இந்த விவ காரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் பார பட்சமின்றி பொதுமக்களைச் சந்தித்து அமைதியை ஏற்படுவதற் கான வழியை காண வேண்டும்.
அரசமைப்பு சட்டத்துக்கு உட் பட்டு நிரந்தரமான மற்றும் நீடித்த தீர்வு காண வேண்டியது அவசியம். மேலும் காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்’’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஒமர் அப்துல்லா, ‘‘காஷ்மீர் பிரச்சினை தொடர்பான எங்களது கோரிக்கைகளை பிரதமர் மோடி மிக கவனமாக கேட்டுக் கொண்டார். அரசியலுக்கு அப்பாற்றப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உருவாகியுள்ளது. மீண்டும் எழும் இத்தகைய சூழ்நிலைக்கு அரசியல் ரீதியில் தான் தீர்வு காண வேண்டும். கடந்த கால தவறுகளையே மீண்டும் செய்தால், விவகாரம் விபரீதமாகிவிடும் என் பதையும் பிரதமரிடம் தெளிவுப் படுத்தியுள்ளோம்’’ என்றார்.
மேலும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கும் வரவேற்பு தெரி வித்து ஒமர் அப்துல்லா ‘ட்விட்டரில்’ கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரதமருடனான இந்தச் சந்திப் பின்போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவிப்பை பிரதமரே அறிவிக்க வேண்டும் என்றும் கோரி மனு அளிக்கப்பட் டுள்ளது.
ஒமர் அப்துல்லாவுடன், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஓய்.தரிகமி, தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனடியாக அனைத்து கட்சி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.