முசாபர் நகர் கலவரம்: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

முசாபர் நகர் கலவரம்: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

உ.பி. மாநிலம் முசாபர் நகர் கலவரம் குறித்த விசாரணையை மாநில போலீசாரிடம் இருந்து சுதந்திரமான அமைப்பிடம் வழங்க வேண்டும் என்ற மனு தொடர்பாக மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும், உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், கடந்த செப்டம்பர் மாதம், 6 மற்றும் 7- ஆம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 62 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இந்த கலவரம் நடந்தது.கடந்த மாத இறுதியிலும், முசாபர் நகரில் மீண்டும் கலவரம் வெடித்தது. அதில், 3 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக மாநில போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை. விசாரணைய சுதந்திரமான அமைப்பிடம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in