

மும்பை மாசகான் பகுதியில் நேற்று அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 32 பேர் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்கட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கல்லாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
5 மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் மொத்தம் 21 குடும்பங்கள் வசித்து வந்தன. கட்டடம் 30 வருட காலம் பழமையானது என தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தை நேற்று நேரில் பார்வையிட்ட அம்மநில முதல்வர் பிருத்துவிராஜ் சவுஹான். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.