Last Updated : 09 Jun, 2017 02:40 PM

 

Published : 09 Jun 2017 02:40 PM
Last Updated : 09 Jun 2017 02:40 PM

இம்மாத இறுதியில் அமெரிக்கா பயணிக்கிறார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் எதிர்நோக்குகிறோம், இம்மாத இறுதியில் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்” என்று அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீத நாயெர்ட் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் அழைப்பை ஏற்று இம்மாத இறுதிவாக்கில் பிரதமர் மோடி வெள்ளைமாளிகை செல்கிறார். சரியான தேதிகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக சந்திக்கவுள்ளனர். இருவரும் தொலைபேசியில் 3 முறையாவது உரையாடியிருப்பார்கள்.

முந்தைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை குறைந்தது 8 முறையாவது சந்தித்திருப்பார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x