மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் வசம் உள்துறை, வீட்டு வசதி, சுகாதாரம்

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் வசம் உள்துறை, வீட்டு வசதி, சுகாதாரம்

Published on

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 10 அமைச்சர்களுக்கான இலாகா விவரங்களை நேற்று அறிவித்தார். உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்டார்.

பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவுக்கு வருவாய், சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் வக்ஃப், வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, பால்பொருள் வளர்ச்சி மற்றும் மீன்வளம், மாநில கலால் வரி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜக முன்னாள் மாநில தலைவர் சுதிர் முங்கன் திவாருக்கு நிதி, திட்டமிடல் மற்றும் வனத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. வினோத்தாவ்டேக்கு பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, மராத்தி பாஷா மற்றும் கலாச்சார நலம் ஆகிய துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

பிரகாஷ் மேத்தாவுக்கு தொழில் மற்றும் சுரங்கத் துறையும், சந்திரகாந்த் பாட்டீலுக்கு கூட்டுறவு மற்றும் ஜவுளி, பொதுப்பணித் துறையும், முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டேவுக்கு ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறையும், விஷ்ணு சவராவுக்கு பழங்குடியினர் மேம்பாடு, சமூக நீதித் துறையும் ஒதுக்கப் பட்டுள்ளது.

இதுதவிர, திலிப் காம்ப்ளி, வித்யா தாகுர் ஆகியோருக்கு இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் ஒதுக்கப்படாத துறைகளை முதல்வரே கவனிப்பார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கில் குற்றச்சாட் டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இருப்பின், அவர்களை விசாரிப் பதற்கு அனுமதி பெறும் நடை முறையை ரத்து செய்யும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். சிவசேனா வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது என்று முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

சொட்டு நீர்ப்பாசன ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் கள் அஜித் பவார், சுனில் தத்கரே ஆகியோரிடம் விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in