

நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சையில், கொலீஜியத்தின் ஆட்சேபங்களுக்கு அமைச்சர் கள் குழு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க உள்ளது.
உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் என்ற அமைப்பு தேர்ந்தெடுத்து வந்தது. இதை ரத்து செய்துவிட்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நிய மிப்பது தொடர்பாக, சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தயார் செய்திருந்தது. அந்த நெறி முறைகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான கொலீஜியம் ஆய்வு செய்தது. பின்னர், நாட்டின் நலன் கருதி, கொலீஜியத்தின் பரிந் துரையை நிராகரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்ற பிரிவுக்கு கொலீஜி யம் ஆட்சேபம் தெரிவித்தது.
மேலும், கொலீஜியத்தின் பரிந் துரையை மத்திய அரசு நிரா கரித்துவிட்டால் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்ற பிரிவுக்கும் நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து கொலீஜியத்தின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அட்டர்னி ஜெனரல் மற்றும் மாநில அரசுகளுக்கான அட்வகேட் ஜெனரல் ஆகியோருக்கும் நீதிபதி கள் நியமனத்தில் பரிந்துரைக்க உரிமை உள்ளது என்ற பிரிவுக்கும் கொலீஜியம் ஆட்சேபம் தெரிவித்து குறிப்பாணையை கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது. இதற்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு 3 வாரத்தில் பதில் அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.