

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி-யின் தலைவராக யு.கே.சின்ஹா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செபி தலைவராக யு.கே. சின்ஹா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஜ்ஜார், பி.சி.கோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு, அகர்வால் என்பவர் யு.கே. சின்ஹா நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், யு.கே. சின்ஹா நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியிருந்தார். ஆனால் சின்ஹா நியமனத்தில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.