மனநலம் பாதித்தவர்கள் தற்கொலைக்கு முயன்றால் தண்டிக்கக் கூடாது: புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்

மனநலம் பாதித்தவர்கள் தற்கொலைக்கு முயன்றால் தண்டிக்கக் கூடாது: புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்
Updated on
1 min read

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, ‘மனநலம் பராமரிப்பு சட்டம் -2017’ புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. மனநலம் பாதிக் கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மனநலம் பாதிக்கப்பட்டவர் களுக்கு அதிர்ச்சி சிகிச்சை (ஷாக் தெரபி அல்லது எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரபி) அளிக்க தடை விதிக்கப்படுகிறது. அவர்களை சங்கிலியால் கட்டி வைக்க கூடாது.

மனநலம் பாதிக்கப்பட்டவர் கள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி செய்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது.

மனநலம் பாதிக்கப்பட்டவர் களைப் பராமரிப்பது, அவர் களுக்கு சிகிச்சை அளிப்பது, அவர் களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுப்பது ஆகியவை மத்திய, மாநில அரசுகளின் கடமை.

மனநலம் பாதிக்கப்பட்டவர் கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in