விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை: காரில் சிவப்பு சுழல் விளக்கை அகற்ற கர்நாடக அமைச்சர் காதர் மறுப்பு

விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை: காரில் சிவப்பு சுழல் விளக்கை அகற்ற கர்நாடக அமைச்சர் காதர் மறுப்பு
Updated on
1 min read

காரில் சிவப்பு சுழல் விளக்கை அகற்றமாட்டேன் என்று கர்நாடக‌ உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களின் வாகனங்களில் இருந்து வண்ண சுழல் விளக்கு களை அகற்றுவது தொடர்பான மத்திய அரசின் சட்டத்திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் தங்களது வாகனத்தில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றினர். நாட்டில் விஐபி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் கர்நாடக உணவுத் துறை அமைச்சர் யு.டி.காதர், “மக்கள் பிரதிநிதிகளான மாநில‌ முதல்வர்கள்,அமைச்சர்கள் தங்கள் வருகையை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலே வாகனங் களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தும் நடைமுறை அமலுக்கு வந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடை முறையில் இருந்த இவ்வழக் கத்தை மத்திய அரசு ரத்து செய் துள்ளது.

சிவப்பு சுழல் விளக்குகளை வாகனங்களில் இருந்து அகற்று வதால் என்ன பயன் வரப்போகிறது? எனது வாகனத்தில் இருக்கும் சிவப்பு சுழல் விளக்கை அகற்று மாறு இதுவரை எவ்வித அதிகாரப் பூர்வ ஆணையும் வரவில்லை. இந்த சுழல் விளக்குகளைப் பொருத்துவதும் அகற்றுவதும் அமைச்சர்களின் கையில் இல்லை. மாநில அரசு உத்தரவிடும்வரை எனது வாகனத்தில் இருந்து நான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றப் போவதில்லை. இதில் மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதனைச் சட்டப்பூர்வமாக சந்திக்க தயாராக இருக்கிறேன்''என்றார்.

முன்னதாக இந்த விவகாரத் தில் முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார். முறையான உத்தரவு வந்த பிறகே, தனது வாகனத்தில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in