

தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே நேற்று கூறியதாவது:
ஆதார் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு யுஐடிஏஐ-யின் அங்கீகாரம் பெற்றிருப்பதாகக் கூறி சில இணையதளங்கள் செயல்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்பட்ட அந்த இணையதளங்களை முடக்க உத்தரவிடப்பட்டது. மீண்டும் இதுபோன்ற புகார் எழுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட 8 இணையதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு www.uidai.gov.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.