கர்நாடகாவில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் தீவிர ரோந்து: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு

கர்நாடகாவில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் தீவிர ரோந்து: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு
Updated on
2 min read

தாக்குதல் தொடர்கிறது; போக்குவரத்து முடக்கம்; கலவர பலி 2 ஆக உயர்வு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் வன்முறை தொடர்வதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பெங்க ளூருவில் பதற்றம் அதிகமாக உள்ள 16 இடங் களில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் வன்முறை யில் ஈடுபட்டதால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தமிழகம் - கர்நாடகா இடையே யான போக்குவரத்து முழுமை யாகத் துண்டிக்கப்பட்டது. தமிழ் திரைப்படங்களும், தமிழ் சேனல்க ளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பெங்களூருவில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. வன்முறை யில் 200-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெங்களூரு வில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கர்நா டக போலீஸார், ஊர்க்காவல் படை, மத்தியப் பாதுகாப்பு படை, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப் பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள், நிறுவனங்கள், தொழிற் சாலைகள் அடித்து நொறுக்கப் பட்டன. தமிழர்களின் உடைமை கள் வீதியில் போட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த வன்மு றையில் தமிழர்களுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் பலி

பெங்களூருவில் உள்ள ஹெக் கனஹள்ளி, கெங்கேரி, காமாட்சி பாளையா உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு நடந்த வன்முறையில் போலீஸார் மீது கல்வீசியும், பெட்ரோல் குண்டு களை வீசியும் தாக்குதல் நடத்தப் பட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உமேஷ் (25) என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதனிடையே லக்கேரியில் போலீஸாரின் தடியடிக்கு அஞ்சி மாடியில் இருந்து குதித்த குமார் (32) மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார்.

நேற்று பேட்ராயனபுரா, நாயண்டஹள்ளி, மைசூரு சாலை, ராஜகோபால் நகர் உள்ளிட்ட 16 இடங்களில் கன்னட அமைப்பினர் நள்ளிரவில் கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்தனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

முழு அடைப்பு

வன்முறை காரணமாக பெங் களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட் டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், திரைய ரங்குகள், தனியார் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், வங்கிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டன. பேருந்துகள் இயக்கப்பட வில்லை.

பெங்களூரு மாநகரப் போக்கு வரத்துக் கழகம் இயக்கிய 6 பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆட்டோ, டாக்ஸி இயக்கப்பட வில்லை. நேற்று மாலை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் கடுமையாகப் பாதிக் கப்பட்டது.

நேற்றும் பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி, லக்கேரி, பீன்யா ஆகிய இடங்களில் சரக்குகளு டன் நிறுத்தப்பட்டிருந்த தமிழக லாரிகள் தீ வைத்துக் கொளுத் தப்பட்டன. மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், சித்ர துர்கா ஆகிய இடங்களிலும் தமிழக வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள், நிறுவனங் கள், வங்கிகள் மீது கன்னட அமைப்பினர் தொடர்ந்து தாக்கு தல் நடத்தினர். மேலும் தமிழக லாரி ஓட்டுநர்கள், ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடரும் வன்முறையால் கர்நாடகாவில் தமிழர்கள் வசிக் கும் இடங்களுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவப் படை, சிஆர்பிஎஃப், கர்நாடகப் பாதுகாப்பு படை, ஊர்க் காவல் படை உள்ளிட்ட பிரிவுக ளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டதும் சுட உத்தரவு

பெங்களூருவில் பதற்றமாக உள்ள காமாட்சி பாளையா, கெங்கேரி, லக்கேரி, விஜயநகர், ராஜாஜி நகர், மாகடி சாலை உள்ளிட்ட 16 இடங்களில் கண்ட தும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இருப்பினும் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட 335 கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல மண்டியா, மைசூருவிலும் 200-க் கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். பெங்களூருவில் பதற்றமான சூழ்நிலை நிலவுவ தால் இன்று நள்ளிரவு வரை ஊர டங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

மோடியை சந்திக்கிறார்

முதல்வர் சித்தராமையா இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருக்கிறார்.

அப்போது ‘காவிரி விவகா ரத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்த இருப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in