

முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள் மீது சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களை ஒளிபரப்பும் வகையில் தனி தொலைக்காட்சி சேனல் தொடங்க சட்ட அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
‘சட்டம் மற்றும் சட்டப் படிப்பு சேனல்’ என்ற பெயரிலான இந்த சேனல் 24 மணி நேர ஒளிபரப்பு கொண்டதாக இருக்கும். விவாதங்கள், ஆவணப் படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் போதிய அளவு சேகரிக்கப்பட்ட பிறகு இது தொடங்கப்படும்.
கல்வி நிகழ்ச்சிகளுக்காக 32 டிடிஎச் சேனல்களை ‘ஸ்வயம் பிரபா’ திட்டத்தின் கீழ் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இலவசமாக ஒளிபரப்பி வருகிறது. இவற்றில் ஒரு சேனலை தருமாறு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சட்ட அமைச்சகம் கேட்டுள்ளது.
சேனல் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் பணியில் முன்னணி பாலிவுட் இயக்குநர்களை ஈடுபடுத்தவும் சட்ட அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.