

ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா சட்டப்பேரவையில், 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தர் நேற்று தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.1,49,646 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:
விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். ஏழை மாணவர்கள் வெளிநாடுகளில் தொழிற்கல்வி படிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் பிறக் கும் குழந்தைகளுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் பெயரில் 16 பொருட்கள் அடங்கிய மருத்துவ ‘கிட்’ வழங்கப்படும்.
மேலும் பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கு 3 தவணையாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். பெண் குழந்தை பிறந்தால் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். ஏழை பெண்ணின் திருமண செலவுக்கு தலா ரூ.75,116 வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவித்தார்.