

ஆந்திர மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலா ளர்கள் படுகாயம் அடைந்தனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், துனி பகுதியில் நகருக்கு வெளியே பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பயங்கர ஓசையுடன் வெடித்து சிதறின. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த னர். தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் துனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.