

பிஹாரில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிஹார் தலைநகர் பாட்னாவில் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 1,056 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்படும்” என்றார்.