

உத்தராகண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ, பாஜக எம்.பி.யும் தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். ஆனால், சில தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஹரித்துவாரில் உள்ள பூங்காவில், திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு, கீழே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.
உலகப் புகழ் பெற்ற திருக் குறளைத் தந்த வள்ளுவரின் சிலை அலட்சியமாக போடப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பானது. இதையடுத்து, சிலையை நல்ல இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெய லலிதா கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலையை அரசு வளாகத்துக்குள் நிறுவ உத்தராகண்ட் முதல்வர் ராவத் நேற்று உத்தரவிட்டார். இதை யடுத்து முசோரி-டேராடூன் மேம் பாட்டு ஆணைய துணை தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.மீனாட்சி சுந்தரம் (இவர் தமிழகத்தை சேர்ந்தவர்) அதற் கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ‘‘முதல்வர் உத்தர வின்படி நான் ஹரித்துவார் செல் கிறேன். ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து உடனடியாக வள்ளுவர் சிலை நிறுவப்படும்’’ என்றார்.
கங்கை நதிக்கரையோரம் உள்ள மேளா பவனில் வள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது.