

மகாராஷ்டிராவின் மந்திராலயத் தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் இணை செய லாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கட்கே. இவரது 23 வயது மகன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 12-ம் தேதி மகனுக்கான பணிவிடைகளை செய்துவிட்டு, ராஜேஷ் தனது அலுவலகத்துக்கு வந்தார். சிறிது நேரத்தில் தொலைபேசியில் அழைத்த அவ ரது மகன், உடனடியாக வீட்டுக்கு வரும்படியும், இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பதறிப் போன ராஜேஷ் தனது மேலதிகாரியான கூடுதல் முதன்மைச் செயலாளர் பகவான் சாஹேவிடம் நிலைமையை எடுத்துரைத்து அரைநாள் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், அவர் விடுப்பு வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அச்சமடைந்த ராஜேஷ், மண்டியிடாத குறையாக பகவான் சாஹேவிடம் விடுப்பு கேட்டுள்ளார். அப்போதும் அவர் மனம் இளகவில்லை.
கடைசியில் மாலைவரை பணியாற்றிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, ராஜேஷின் மகன் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை கண்டு ராஜேஷ் கதறி அழுதது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ராஜேஷுக்கு விடுப்பு அளிக் காததால், அவரது மகன் தற் கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த சக ஊழியர்கள் மேலதிகாரியான பகவான் சாஹேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, பகவான் சாஹே நேற்று அதிரடி யாக பணியிடமாற்றம் செய்யப் பட்டார். தற்போது மிகுந்த மனஉளைச்சலில் உள்ள ராஜேஷ் விருப்ப ஓய்வு கேட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.