Published : 01 Feb 2017 12:43 PM
Last Updated : 01 Feb 2017 12:43 PM

பட்ஜெட் 2017: ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

மத்திய அமைச்சர் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் 'ரயில்வே துறை' தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

* நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும்.

* 2017 - 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும்.

* இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும். கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.

* 7,000 ரயில் நிலையங்கள் சூரிய மின் திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.

* ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x