

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீடு அருகே, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி கோஷங்களை எழுப்பினர்.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் 10,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் காம்கார் யூனியன் உறுப்பினர் நவீன் கூறுகையில: "10 ஆண்டுகளாகியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் கேஜ்ரிவால் டெல்லியில் ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதை அடுத்து அவருக்கு எங்களது கோரிக்கையை எடுத்துரைக்கவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.