விமானப்படை அதிகாரியின் கைபேசி, மடிகணினி திருட்டு

விமானப்படை அதிகாரியின் கைபேசி, மடிகணினி திருட்டு
Updated on
1 min read

இந்திய விமானப் படை அதிகாரியின் கைபேசி மற்றும் மடிகணினி காணாமல் போனது குறித்து, காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள இந்திய விமானப்படையின் தலைமை யகத்தில் ‘விங் கமாண்டர்’ அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி, தான் பயன்படுத்தி வந்த, உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘ஏஃப்செல்’ (ஏர்ஃபோர்ஸ் செல்லு லார்) கைபேசி மற்றும் மடி கணினியை காணவில்லை என, துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தனது அரசு குடியிருப்பில், தான் மட்டும் இருக்கும் போது, குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக் காக சொந்த ஊர் போயிருந்த சமயத்தில் இவை இரண்டும் காணாமல் போனதாக அந்த அதிகாரி புகாரில் குறிப்பிட் டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக் காக, இந்திய விமானப் படையில் பணிபுரிவோருக்காக மட்டும் பிரத்தியேகமாக, ‘ஏஃப்செல் மொபைல்’ சேவையை இந்திய விமானப்படை 2013-ம் ஆண்டில் தொடங்கியது. ஒரே கட்டுப்பாட் டின் கீழ் அனைத்து இணைப்பு களும் கொண்டுவரப்பட்டதன் மூலம், ராணுவத் தகவல் திருட்டு, ஒட்டுகேட்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது, விமானப் படை அதிகாரியின் கைபேசியும், மடி கணினியும் அதிமுக்கிய தகவல் களை திருடுவதற்காக எடுக்கப் பட்டதா என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும் டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in