

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் ஆற்றில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 20 பேர் பலியாகினர்; 40 பேர் படுகாயம் அடைந்தனர்.பலியானவர்களில் 13 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள் ஆவர்.
இமாச்சல பிரதேசத்தில், புனித யாத்திரை முடித்துக் கொண்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. டிரக்கில் அளவுக்கு மீறி பயணிகள் இருந்ததால் விபத்து எற்பட்டதாக ஹோசியார்பூர் போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஹோசியார்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை தேவை என புருனேவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு.