Published : 20 Jul 2016 10:21 AM
Last Updated : 20 Jul 2016 10:21 AM

7 லட்சம் நுகர்வோருக்கு சமையல் காஸ் மானியம் ரத்து

நாட்டில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு நுகர்வோர், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் கொண்டவர்களாக இதுவரை அடையாளம் காணப் பட்டு, அவர்களின் மானிய உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவரின் வருமானம் ஆண்டுக்கு 10 லட்சத் துக்கு மேல் இருந்தால், அக்குடும்பம் இந்த ஆண்டு தொடக்கம் முதலே சமையல் எரிவாயு சிலிண்ட ருக்கு சந்தை விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்கள் தங்கள் ஆண்டு வரு மானம் குறித்து எரிவாயு முகவரிடம் பிரமாண பத்திரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு அளிக் கப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையிலும் வருமான வரித் துறை புள்ளிவிவரம் அடிப்படை யிலும் இதுவரை 7 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 20 லட்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்ட ருக்கு ரூ.2 உயர்த்திக்கொள்ளவும் மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. மேலும் மண் ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் வீதம் 10 மாதங்கள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி தரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியத்தை குறைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. இது தவிர கடந்த 2 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியும் மானியத்தை குறைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவியுள்ளது.

நுகர்வோரின் வங்கிக் கணக் கில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின், 3.25 கோடி போலி நுகர்வோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதன் மூலம் மானியத் தொகை சேமிக்கப் பட்டது. மேலும் 1 கோடிக்கும் மேற் பட்ட நுகர்வோர் தாமாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.

கடந்த 2014-15-ம் நிதியாண்டில் சமையல் எரிவாயுக்கான மத்திய அரசின் மானியம் ரூ.76,285 கோடி யாக இருந்தது. இந்நிலையில் அரசின் மேற்கண்ட தொடர் நடவடிக்கை காரணமாக 2015-16-ல் சமையல் எரிவாயுக்கான மானியம் ரூ.27,571 கோடியாக குறைந் துள்ளது. நேரடி மானியத் திட்டத் தின் கீழ் சமையல் எரிவாயு நுகர்வோரின் வங்கிக் கணக்கில் இம்மாதம் மானியத் தொகையாக சிலிண்டருக்கு ரூ.116.34 செலுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x