Last Updated : 08 Aug, 2016 09:01 AM

 

Published : 08 Aug 2016 09:01 AM
Last Updated : 08 Aug 2016 09:01 AM

மக்களவையில் இன்று ஜிஎஸ்டி மசோதா தாக்கல்

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்த வகைசெய்யும் அரசமைப்பு சட்ட (122-வது திருத்த) மசோதா-2014, மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. விவாதத்தின்போது பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்துக்கு இந்த ஜிஎஸ்டி மசோதா வழிவகுக்கும். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரி விதிக்கும் நடைமுறைக்கு பதில் ஒருமுனை வரிவிதிக்க இது வகை செய்யும். இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த மசோதா கடந்த ஆண்டு மக் களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும், இதன் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் நிறை வேற்ற முடியாத சூழல் இருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சி களின் கோரிக்கையை ஏற்று 4 முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டதை யடுத்து, அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேறி யது.

இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் மக்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். எனவே, திருத்தங்களுடன் கூடிய இந்த மசோதா இன்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியும் பதில் அளிக்க உள்ளார்.

ஜிஎஸ்டி மசோதா நாடாளு மன்ற இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்ட 30 நாட்களில், குறைந்தபட்சம் 16 மாநில சட்டப் பேரவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். எனவே, இது தொடர் பாக பாஜக ஆளும் மாநில முதல் வர்களுடன் மத்திய அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x