

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர் நகரில் தனது சகோதரன் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் இளம் பெண் ஒருவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தர்மேந்தர் சிங் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது சகோதரனும் கர்னல் நகரிலி ருந்து சஹர்னபூருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த சிலர் இருவரையும் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ள னர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர்களை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத் துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.