

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஹோலி வண்ணப் பண்டிகை நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியையும் இனிமையையும் இப்பண்டிகை பரவச் செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு ஆகியோரும் ஹோலி பண்டிகையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்துச் செய்தியில், இந்த நாளில் ஏழைகளுக்கு தாராளமாக உதவி செய்வோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட் டோரும் ஹோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.