Last Updated : 26 Sep, 2016 10:58 AM

 

Published : 26 Sep 2016 10:58 AM
Last Updated : 26 Sep 2016 10:58 AM

கிருஷ்ணா, கோதாவரி நதிகள் பாயும் 4 மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக மகா ராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங் களில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் கரையோரப் பகுதி மாவட்டங்களுக்கு மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய மாநில அரசுகள் உச்சபட்ச முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சகம் விடுத் துள்ள அறிக்கையில் அறிவுறுத்தி யுள்ளது.

தெலங்கானாவில் அடுத்த 4 நாட்களுக்கு நிஜாமாபாத், அதிலாபாத், கரிம்நகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான வெள்ளப் பெருக்கு இருக்கும். ஆந்திராவின் கம்மம் மாவட்டம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் ஏற்படலாம்.

மகாராஷ்டிராவில் பீட், லடுர், நான்டெட் ஆகிய மாவட்டங் களுக்கும், கர்நாடகாவில் பிடார், தெலங்கானாவில் மேடக், ரஹ்கா ரெட்டி, நிஜாமாபாத் மாவட்டங் களில், கோதாவரியின் உப நதி களிலில் வரும் வெள்ளத்தால் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

24 தொழிலாளர் மீட்பு

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய 24 தொழிலாளர்களை இந்திய விமானப் படை வீரர்கள் மீட்டனர். தெலங்கானாவில் கன மழை காரணமாக தலைநகர் ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை கனமழை பெய்ததால், விமானப் படை வீரர்களின் மீட்புப் பணி தடைபட்டது. மீண்டும் நேற்றுக் காலை மீட்புப் பணி தொடங்கியது.

மத்தியப் பிரதேசம், ஒடிசாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் கள் யெடுபயலா பகுதியில் மூன்று பாலங்களைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மஞ்சீரா ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

ஆற்றுப்படுகையில் கற்கள் இருப்பதால் படகுகள் மூலம் மீட்க முடியாது என தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் தெரி வித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து விமானப்படையின் உதவியை மாவட்ட ஆட்சியர் நாடினார். உடனடியாக விமானப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 24 தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.

சந்திரபாபு ஆய்வு

ஆந்திராவில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குண்டூர் மாவட்டம் பல்நாடு பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x