

`உயர் வகுப்பினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள்' என்று பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிஹாரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், "உயர் வகுப்பினர் எல்லாருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிஹாரில் அரசுகளை அமைப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றுவார்கள்" என்றார்.
இவரின் இந்தக் கருத்துக்கு பிஹாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறும்போது, "இவரின் இந்தக் கருத்தால் பிஹாரின் வன்முறைகள் நேரிடலாம்" என்றார்.