

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி ராகுல் காந்தி தலை மையில் காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டதால் புதன்கிழமை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
புதன்கிழமை காலை மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் அதிகரித்து வரும் மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்த ராகுல், கேள்வி நேரத்தை நடத்த விடாமல் பிரச்சினை எழுப்பினார்.
வெங்கய்ய நாயுடு பதில்
இந்த நிகழ்வின்போது, பிரதமர் நரேந்திர மோடியும் அமர்ந்தி ருந்தார். அப்போது, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு எழுந்து, “நாட்டில் மதக் கலவரம் எதுவும் இல்லை. அநாவசியமாக பிரச்சினை எழுப்ப வேண்டாம்” என அமளிக்கு நடுவே தெரிவித்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோது காங்கிரஸார் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ராகுல் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வை தனது இருக்கையில் அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உறுப்பினர்களை உற்சா கப்படுத்திக் கொண்டிருந்தார்.
ராகுல் பேட்டி
அவைக்கு வெளியே செய்தி யாளர்களிடம் ராகுல் பேசும்போது, “மக்களவையில் ஒரு நபரின் குரல் மட்டுமே கேட்கிறது. எதிர்க்கட்சியினரின் குரலுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களவைத் தலைவர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார். இதை ஏற்றுக்கொண்டு சும்மா இருக்க முடியாது” என்றார்.
சபாநாயகர் மறுப்பு
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, ‘‘அனைத் துக் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளித்து வருகிறேன். ஆனால் அனுமதி அளிக்க முடியா மல் போகும் சில உறுப்பினர்கள் மட்டும் என் மீது புகார் கூறுகின் றனர். நானும் ஒரு மூத்த உறுப் பினர்தான். உறுப்பினர்களின் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறேன்’’ என்றார்.