உறவினர்கள் கூட்டம் அதிகமானதால் பந்தி பரிமாற உணவு பற்றாக்குறை: திருமணத்தை நிறுத்திய மணமகன் மீது வழக்குப் பதிவு

உறவினர்கள் கூட்டம் அதிகமானதால் பந்தி பரிமாற உணவு பற்றாக்குறை: திருமணத்தை நிறுத்திய மணமகன் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

பெங்களூருவில் உறவினர்கள் 30 பேருக்கு பரிமாற போதிய உணவு இல்லாததை காரணத்தை காட்டி மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள‌ கோன னெகுண்டேவைச் சேர்ந்த நாகேந் திர பிரசாத்துக்கும், கனகப் புராவைச் சேர்ந்த நந்தினிக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு மணம் நடைபெறுவதாக இருந் தது. இதையொட்டி சனிக்கிழமை இரவு கோனனெகுண்டேவில் உள்ள சவுதாமினி திருமண மண்ட பத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

ஒரு கட்டத்தில் உறவினர்கள் கூட்டம் அதிகரித்ததால் சுமார் 50 பேருக்கு பரிமாற உணவு போதவில்லை. அதில் 30 பேர் மணமகன் வீட்டாரைச் சேர்ந்தவர் கள். அவர்கள் இதுகுறித்து மண மகன் நாகேந்திர பிரசாத்திடம் முறையிட்டனர். ஆத்திரம் அடைந்த அவர் உடனடியாக போதிய உணவுக்கு ஏற்பாடு செய் யுமாறு மணமகள் வீட்டாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்களும் உணவுக்கான ஏற்பாடு களை பரபரப்புடன் செய்து கொண் டிருந்தனர். எனினும் தாமதமான தால் மணமகன் வீட்டார், மண மகளின் பெற்றோர் மற்றும் உறவி னர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக் குள் பிரச்சினை வெடித்தது.

இதைத்தொடர்ந்து மணமகன் நாகேந்திர பிரசாத் திருமணத்தை திடீரென நிறுத்திவிட்டு, மண்டபத் தில் இருந்து வெளியேறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் குடும்ப‌த்தினர் அவரை சமாதானம் செய்ய முயற் சித்தனர். எனினும் நாகேந்திர பிரசாத் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

மனம் உடைந்த மணமகள் குடும்பத்தினர் இதுகுறித்து போலீ ஸில் புகார் அளித்தனர். அதில் மணமகன் வீட்டார் அறிவுறுத் தலின் பேரில் ரூ.10 லட்சம் செல வழித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் உணவு போதவில்லை என்ற மலிவான காரணத்தை காட்டி திருமணத்தை நிறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந் தனர். அதன் அடிப்படையில் மண மகன் நாகேந்திர பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in